2025 மே 13, செவ்வாய்க்கிழமை

வலது குறைந்தோர்களுக்கான வாழ்வாதார மாதாந்த கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு

Kogilavani   / 2011 ஜூன் 25 , மு.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எப்.முபாரக், எம்.பரீட்)  
மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் கீழ்  கிண்ணியா பிரதேசத்தில் வலது குறைந்தோர்களுக்கான வாழ்வாதார மாதாந்த கொடுப்பனவு வழங்கும் ஆரம்ப வைபவம் எதிர்வரும் 28 ஆம் திகதி செவ்வாய்கிழமை கிண்ணியா சமூக பராமரிப்பு நிலையத்தில் நடைபெறவுள்ளது.

சமூக சேவைகள் அமைச்சின் கீழ் உள்ள சமூக பராமரிப்பு நிலையத்தால் நடைமுறைப்படுத்தப்படும் இத் திட்டத்தின் கீழ் கிண்ணியா பிரதேசத்தில் இருந்து 32 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு மாதாந்தம் 3000 ரூபா வழங்கப்படவுள்ளது.

கிண்ணியா பிரதேச சமூக சேவை உத்தியோகத்தர் எம்.எம். அப்துல்லாவின் நெறிப்படுத்தலில் கீழ், பிரதேச செயலாளர் எம்.முபாரக் தலைமையில நடைபெறவுள்ள இந்நிகழ்வில், திருகோணமலை மாவட்ட நாடாளமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் பிரதம விருந்தினராக கலந்து கொள்ளவுள்ளார்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X