Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Menaka Mookandi / 2011 ஜூலை 21 , மு.ப. 08:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.பரீட்)
திருகோணமலை மாவட்டத்தில் இறக்கக்கண்டி, இக்பால் நகர், குச்சவெளி, பாலையூற்று பிரதேச மீனவர்கள் மீன்பிடிப்பதற்காக இருந்து வந்த பாஸ் நடைமுறை உடனடியாக அமுலுக்குவரும் வகையில் இன்று முதல் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைர் தெரிவித்தார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தலைமையிலான உயர்மட்ட கட்சி உறுப்பினர்கள் நேற்று அப்பகுதிகளுக்கு விஜயம் செய்து பார்வையிட்டபோதே மேற்படி பாஸ் நடைமுறை நீக்கப்பட்டுள்ளது.
மீனவர் முன்வைத்த மேற்படி பிரச்சினையை கேட்டறிந்த அமைச்சர் பதியுதீன் உடனடியாக பொருளாரதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவுடன் உரையாடி பாஸ் தடை நீக்கப்பட்டதாக அமைச்சர் சுபைர் தெரிவித்தார்.
அதேநேரம் மீன்பிடிக்கச் செல்வோர்களின் எண்ணிக்கை நான்காக இருந்ததையும் நீக்கியுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago