Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை
Super User / 2011 ஜூலை 21 , மு.ப. 10:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
(றிப்தி அலி)
சர்ச்சைக்குரிய கிழக்கு மாகாண ஆசிரியர் இடமாற்றத்தில் இடம்பெற்ற குளறுபடிகளை விசாரிப்பதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.
கடந்த ஜுன் 22ஆம் திகதி இடம்பெற்ற மாகாண அமைச்சரவையின் போது சர்ச்சைக்குரிய கிழக்கு மாகாண ஆசிரியர் இடமாற்றம் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்கான குழுவொன்று நியமிக்கப்பட வேண்டும் என் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
இத்தீர்மானத்திற்கிணங்கவே மாகாண ஆளுநர் ரியர் அட்மிரல் மொஹான் விஜயவிக்ரவமினால் இக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.
மாகாண ஆசிரியர் இடமாற்றத்திற்காக 4.7 மில்லியன் ரூபா செலவிட்டமை உட்பட பல விடயங்கள் தொடர்பில் இக்குழு விசாரணைகளை மேற்கொள்ளப்படவுள்ளது.
மாகாண பிரதம செயலாளர் வி.பி.பாலசிங்கம் தலைமையிலான இக்குழுவில் மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் என்.ஏ.ஏ.புஷ்பகுமார உட்பட மூவர் அங்கம் வகிக்கின்றனர்.
சர்ச்சைக்குரிய கிழக்கு மாகாண ஆசிரியர் இடமாற்றம் எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி வரை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் தற்காலிகாமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
vaasahan Friday, 22 July 2011 03:53 PM
எல்லாம் மூடி மறைக்கப்படும். நீதி நடப்பதாக யாரும் கருதிக்கொள்ளத் தேவையில்லை. இத்தனை லகரங்களும் செலவிடப்படும்போது பார்த்துக்கொண்டிருந்த கௌரவ அய்யா மூடி மறப்பதில் உதவாமலா இருக்கப்போகிறார்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago
8 hours ago
8 hours ago