2025 மே 12, திங்கட்கிழமை

பொலிஸாருக்கு தமிழ்மொழிக் கற்கை; திருமலையில் ஆரம்பம்

Menaka Mookandi   / 2011 ஜூலை 25 , மு.ப. 11:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அமதோரு அமரஜீவ)

திருகோணமலையில் அமைக்கப்பட்டுள்ள பொலிஸ் கல்லூரியில் இன்று முதன்முறையாக தமிழ்மொழிக் கற்கைநெறி ஆரம்பிக்கப்பட்டது.

பொலிஸ் அத்தியட்சகர் பந்துல விஜேவர்தனவினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்த கற்கைநெறியினை மேற்கொள்வதற்காக திருகோணமலை, கந்தளாய், கம்பளை, நுவரெலியா பிரதேசங்களில் கடமையாற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அமைச்சுப் பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த 94பேர் தெரிவாகியுள்ளனர்.

மொழிப் பிரச்சினையைத் தீர்த்தல், தமிழ் மக்கள் பெருமளவில் வாழும் பிரதேசங்களில் கடமைகளில் ஈடுபடுதல் உள்ளிட்ட விடயங்களைக் கருத்திற் கொண்டே இந்த தமிழ்மொழிக் கற்கைநெறி ஆரம்பிக்கப்பட்டதாக பொலிஸ் அத்தியட்சகர் பந்துல விஜேவர்தன தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X