Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 12, திங்கட்கிழமை
Menaka Mookandi / 2011 ஜூலை 29 , மு.ப. 07:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
(அமதோரு அமரஜீவ)
திருகோணமலை, சீனன்குடா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட லங்காபாலம் பகுதியிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சீனன்குடா பகுதியைச் சேர்ந்த சிவராஜா டேவிட் மனோகரன் (வயது 56) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இன்று காலை 6.30 மணியளவில் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய இந்த சடலம் மீட்கப்பட்டதாக சீனன்குடா பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் தொடர்பான மரண விசாரணைகளை திருகோணமலை மேலதிக நீதிவான் எஸ்.சதீஸ்குமார் மேற்கொண்டதை அடுத்து அச்சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
குறித்த நபரது மரணத்துக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை என்று தெரிவித்த சீனன்குடா பொலிஸார், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக குறிப்பிட்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago
8 hours ago
8 hours ago