Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 12, திங்கட்கிழமை
Menaka Mookandi / 2011 ஓகஸ்ட் 03 , மு.ப. 08:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
(அமதோரு அமரஜீவ)
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை பணிப்பெண் ரிஸானா நபீக்குக்கு புனித ரமழான் பண்டிகையை முன்னிட்டு மன்னிப்பு வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
சவீதியில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒருவர் நீண்ட காலமாக சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்றால் அவர் ரிஸானா நபீக் மாத்திரமே.
இந்நிலையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் சவூதி மன்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தைக் கவனத்திற் கொண்டும் ரமழான் பண்டிகையை முன்னிட்டும் ரிஸானாவுக்கு மன்னிப்பு வழங்கப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
தற்போது அனுஷ்டிக்கப்பட்டு வரும் நோன்புக் காலம் முடிவடைந்ததும் ரிஸானாவின் விடுதலை குறித்த தீர்மானம் எடுக்கப்படும் என்று சவூதி, றியாத் நகரில் அமைந்துள்ள அல் - அபீர் மருத்துவமனையில் கடமையாற்றும் இலங்கையின் பல் வைத்தியர் திருமதி கிதாயா இப்திகார், ரிஸானாவின் பெற்றோரை இன்று புதன்கிழமை சந்தித்து தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Abdul Basith Thursday, 04 August 2011 12:11 AM
அல்ஹம்துலில்லாஹ் எல்லாப் புகழும் அவனுக்கே. நாட்டில்உள்ள ஏஜண்ட்கள் வயசு காணாத பிள்ளைகளுக்கு வயதை கூட்டி கடவுச் சீட்டு எடுத்து அனுப்புவது மற்ற மதத்தவர்களை முஸ்லீம் என்ற பெயரில் அரபு நாடுகளுக்கு அனுப்புவது இங்குவந்ததும் நடப்பதுகள் முரண்பாடானதுதான். இதைச் செய்து அனுப்பு ஏஜண்டகளை இல்லாதொழிக்க வேண்டும். மக்கள் ஒன்றுசேர்ந்து இப்புனித மாதத்தில் ரிஸானா நபீக்கிற்காக பிராத்தனை செய்வோமாக. ஆமீன்.
Reply : 0 0
shakinah amudah Monday, 08 August 2011 12:43 AM
அல்ஹம்துலில்லாஹ்.
Reply : 0 0
vaasahan Sunday, 07 August 2011 09:11 PM
பெண்கள் வெளிநாடு செல்ல எத்தனிப்பது வயிற்ருப் பசியை விடவும் சீதனக் கொடுமையால்தான். இந்தக் கலாசாரம் ஒழிக்கப்படுவதற்குப் பதிலாக மற்றப் பிரதேசங்களிலும் மறைமுகமாகவும் தீவிரமாகவும் வளர்ந்து வருவதை சமூகம் கண்டு கொள்ளுமா?
Reply : 0 0
Mohamed Uwais Friday, 05 August 2011 06:44 AM
I hope to Rizanas Release as soon as insha allah
Reply : 0 0
AMII Friday, 05 August 2011 04:09 AM
அல்ஹம்து லில்லாஹ்
Reply : 0 0
fainaz Friday, 05 August 2011 03:38 AM
நிச்சயமாக எல்லா புகழும் அல்லாவுக்கே.
Reply : 0 0
A.Riyal - Jeddah - Saudi Arabia Thursday, 04 August 2011 07:48 PM
சிறு வயதுப்பெண்களை வயதை கூட்டி வெளிநாடுகளுக்கு அனுப்பும் ஏஜன்ட் மற்றும் சப் ஏஜன்ட் களை இனம் கண்டு முதலில் துரத்தியடிக்க வேண்டும்... ரிசானாவின் விடுதலைக்காக இறைவனிடம் பிறாற்த்திப்போமாக.....
Reply : 0 0
hamza Thursday, 04 August 2011 03:05 PM
மன்னிப்பது தெய்வகுணம்.....
Reply : 0 0
npfareed Thursday, 04 August 2011 07:29 AM
ரிசானாவை விடுவித்தால் நிச்சயம் அல்லா அந்நாட்டவர்களுக்கும் மரணித்த குழந்தையுடைய தாய் தகப்பனுக்கும் அல்லா பரகத் செயவானாக என்று இலங்கை வாழ் மக்களின் பிரார்த்தனை கட்டாயம் நிறைவேற நானும் பிரார்த்திக்கிறேன் எல்லாம் வல்ல இறைவன் ரிசானாவிற்கும் அவள் குடும்பதார்களுக்கும் பரகத் செயவானாக.
Reply : 0 0
riyas Thursday, 04 August 2011 04:11 AM
முதலில் இந்த சீதன கலாச்சாரத்தை நிறுத்துங்கள் . பெண்கள் பாதுகாக்கப்படுவார்கள்.
Reply : 0 0
சிறாஜ் Thursday, 04 August 2011 03:55 AM
அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும். இச்செய்தி பார்த்து சந்தோசம் அடைய முடியாது. ஏன் என்றால் இதற்கு முதல் இது போல் பல செய்தி கேட்டும் எதுவும் நடக்கவில்லை. எனவே அனைவரும் துஆவில் ஈடுபடுங்கள். இறைவன் அந்த தாய்க்கு நல்ல எண்ணம் கொடுத்து மன்னிக்கும் மனதை கொடுக்கட்டும், இனிமேலும் நம் நாட்டில் இருந்து பெண்களை வெளிநாடு அனுப்புவதனை முற்றாக தடை செய்ய முயற்சி எடுப்போம். விழிப்பாக இருங்கள் யாரும் தலையிட்டு பெண்கள் வெளிநாடு விசயத்தில் பேசலாம் நன்றி - சவுதியில் இருந்து சிறாஜ்.
Reply : 0 0
mihwar Wednesday, 03 August 2011 07:54 PM
அல்ஹம்துலில்லாஹ் . அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும்
Reply : 0 0
gayu Wednesday, 03 August 2011 11:36 PM
எங்களது விருப்பமும் இதுவே. நாங்களும் ரிசானாவுக்காக கர்த்தரிடம் வேண்டுகிறோம்.
Reply : 0 0
Jaleel JP Wednesday, 03 August 2011 11:15 PM
நன்றி இறைவனுக்கு, இஸ்லாம் பாதுகாக்க வேண்டும்,
எனவே தாய் மார்களே உங்கள் பெண்மணிகளை இனியும் வெளிநாடு அனுப்புவதை தவிர்த்துக் கொள்ளுங்கள் தயவுசெய்து.
Reply : 0 0
ABDULLAH Wednesday, 03 August 2011 10:29 PM
இனியாவது சப் ஏஜெண்டுகளை துரத்துவோம்!
Reply : 0 0
ABDULLAH Wednesday, 03 August 2011 10:26 PM
அல்லாஹு அக்பர்!
Reply : 0 0
mauni Wednesday, 03 August 2011 09:27 PM
இந்த புனிதமான ரமழானில் நமது சகோதரி ரிஸானா நபீக்கின் விடுதலைக்காக அல்லாஹ்விடம் பிரார்த்திப்பது முஸ்லிம்கள் ஒவ்வொருவரினதும் கடமை. ரிஸானா விடுதலை செய்யப்பட்டார் என்ற நல்ல செய்தியோடு நம்மிடமிருந்து ரமழான் விடைபெற வேண்டும்.
Reply : 0 0
anas Wednesday, 03 August 2011 09:16 PM
இனியும் தங்கள் பெண்களை வெளிநாடு அனுப்புவதை தவிக்கவும்.
Reply : 0 0
ground Wednesday, 03 August 2011 09:06 PM
pls try to do this help rizana's matter
Reply : 0 0
aJ Wednesday, 03 August 2011 08:18 PM
நல்ல செய்தி.
நான் திருமதி கிதயாவை சந்தித்து பேசி இருக்கிறேன். மிக சிறந்த மனிதர். ஒரு மருத்துவர் அதுவும் பெண் மருத்துவர் எப்படி இருக்கவேண்டும் என்பதுக்கு நல்ல உதாரணம். தொடரட்டும் பணிகள்.
Reply : 0 0
Ullam Wednesday, 03 August 2011 08:01 PM
அல்ஹம்துலில்லாஹ்.
Reply : 0 0
Thariq Niyas Wednesday, 03 August 2011 07:55 PM
சகோதரர்களே ரிசானா வின் விடுதலைக்காக இந்த தூய்மையான மாதத்தில் எல்லோரும் பிரார்த்திப்போமோக....... இது துஆக்கள் ஏற்றுக் கொள்ளப்படும் மாதம்.......
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 May 2025
11 May 2025
11 May 2025
11 May 2025