Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Kogilavani / 2011 ஓகஸ்ட் 04 , பி.ப. 12:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
(அமதோரூ அமரஜீவ)
குச்சவெளி பிரதேச சபையின் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டுள்ள ஏ.முபாரக், அப்பதவிக்கு சட்டரீதியாக தகுதியுடையவரா என விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசபிரியவினால் திருகோணமலை மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளருக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளரால் திருகோணமலை மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளருக்கு கடிதமொன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி மன்றமொன்றில் அலுவலராக கடமையாற்றிய ஒருவர் தேர்தலில் போட்டியிடும் பட்சத்தில் தேர்தல் நடைபெறுவதிலிருந்து ஒரு வருடத்திற்கு முன்னர் பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் அல்லது இடமாற்றம் பெற்றிருக்க வேண்டும் என உள்ளூராட்சி மன்ற சட்டத்தின் 262ஆவது பிரிவின் 9(1) சரத்தின் 6ஆம் இலக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், குச்சவெளி பிரதேச சபையின் எழுதுவினைஞராக கடமையாற்றிய ஏ.முபாரக், குச்சவெளி பிரதேச சபை தேர்தலில் போட்டியிடும் போது அவர் தனது பதவியை இராஜினாமா செய்யவில்லை. அத்துடன் எவ்வித இடமாற்றமும் பெற்றிருக்கவில்லை.
இதனால், இவர் உறுப்புரிமையப் பெற முடியாது. இந்நிலையில் உரிய சம்பவத்துக்கு எதிராக உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசபிரியவாகிய நான், திருகோணமலை மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளராகிய உங்களுக்கு உத்தரவிடுகின்றேன்' என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசபிரியவினால் திருகோணமலை மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளருக்கு வழங்கப்பட்ட கடித பிரதிகள் கிழக்கு மாகாண உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சின் செயலாளர், திருகோணமலை மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி, திருகோணமலை மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர், சட்டமா அதிபர் மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொது செயலாளர் ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Dean Saturday, 06 August 2011 12:18 PM
கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையா?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
1 hours ago
1 hours ago