Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Suganthini Ratnam / 2011 ஓகஸ்ட் 10 , மு.ப. 08:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
(அமதோரு அமரஜீவா)
வர்த்தகம் மற்றும் கலைப்பிரிவில் கல்வி பயின்றவர்கள் தாதிமார்கள் பதவியில் இணைத்துக்கொள்ளப்படுகின்றமையை கண்டித்து திருகோணமலை பொதுவைத்தியசாலைக்கு முன்பாக தாதிமார்கள் இன்று புதன்கிழமை நண்பகல் அடையாள பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.
திருகோணமலை பொதுவைத்தியசாலை, மூதூர் தள வைத்தியசாலை, கிண்ணியா வைத்தியசாலை ஆகிய வைத்தியசாலைகளைச் சேர்ந்த தாதிமார்களே இந்த அடையாள வேலைநிறுத்தத்தில்
சுமார் ஒரு மணிநேரம் ஈடுபட்டனர்.
இந்த அடையாள வேலைநிறுத்தத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த திருகோணமலை பொதுவைத்தியசாலையின் அரசாங்க தாதிமார்கள் சங்கத்தின் செயலாளர் யாழினி ஞானரூபன்,
வடக்கு, கிழக்குப் பகுதிகளில் வர்த்தம் மற்றும் கலைப்பிரிவில் கல்வி பயின்றவர்களுக்கு தாதிமார்கள் நியமனம் வழங்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு வர்த்தம் மற்றும் கலைப்பிரிவில் கல்வி பயின்றவர்களுக்கு தாதிமார்கள் நியமனம் வழங்கப்படுவதால் தாதிமார்களுக்குரிய தரம் குறைக்கப்படுகிறது.
1996ஆம் ஆண்டு தாதிமார்கள் யாப்பின் பிரகாரம் க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் விஞ்ஞானப் பிரிவில் பயின்றவர்களுக்கே தாதிமார்களுக்கான நியமனம் வழங்கப்பட வேண்டும்.
வர்த்தகம் மற்றும் கலைப்பிரிவில் பயின்றவர்களுக்கு தாதிமார்கள் நியமனம் வழங்கப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டுமெனவும் அவ்வாறு நிறுத்தப்படாதுவிடின் கடுமையான தொழிற்சங்கப் போராட்டம் முன்னெடுக்கப்படும் என்றார்.
வர்த்தகம் மற்றும் கலைப்பிரிவில் பயின்றவர்களுக்கு வைத்தியர், மருந்தாளர் போன்ற பதவிகளை வழங்குவார்களா? இதற்கு தாதிமார்கள் மாத்திரம் விதிவிலக்காவெனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கேள்வியெழுப்பினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
24 minute ago
2 hours ago