2025 மே 08, வியாழக்கிழமை

பலநோக்கு கூட்டுறவுச் சங்க உறுப்பினர்களின் ஆர்பாட்டத்திற்கு தீர்வளிக்கும் கூட்டம்

Kogilavani   / 2011 ஓகஸ்ட் 18 , மு.ப. 09:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)
திருகோணமலை பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர் ரஞ்சனி செல்வராஜா திடீரென இடமாற்றம் செய்யப்பட்டதைக் கண்டித்தும், பணியாளர்களின் சம்பள உயர்வை அமுல் படுத்தக் கூறியும் நேற்று புதன்கிழமை பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுதொடர்பான கூட்டம் ஒன்று கிழக்கு மாகாண ஆளுநர் தலைமையில் இன்று இடம்பெற்றது.

இக்கூட்டத்தின் கிழக்கு மாகாண அமைச்சர் சார்பாக அமைச்சின் பிரத்தியோகச் செயலாளர் எம்.எஸ்.தௌபீக, கூட்டுறவுச் சங்க ஆணையாளர் எம்.சீ.எம். சரீப் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் ரஞ்சனி செல்வராஜாவின் இடமாற்றத்தை இரத்துச் செய்வதில்லையெனவும், அதற்குப் பதிலாக வேறு ஒருவரை நியமிப்பது என்றும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதுடன் நியாயமான சம்பள அதிகரிப்பை வழங்குவதகுவதாகவு;ம் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இத்தீர்மானங்களை ஆர்பட்டாத்தில் ஈடுப்பட்டவர்கள் ஏற்றுக்கொண்டனர்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X