2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளினால் பவளப்பாறை சேதம்

A.P.Mathan   / 2011 ஓகஸ்ட் 22 , பி.ப. 01:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அமதோரு அமரஜீவ)

நிலாவெளியிலுள்ள புறாமலைத் தீவை அண்மித்த சுமார் ஒரு கிலோமிற்றர் கடற்பரப்பில் மீனவர்கள் மீன்பிடித் தொழிலை மேற்கொள்வதற்கான தடை விதிக்கப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகளை உபயோகித்து மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபட்டுள்ளதால் புறாமலைத் தீவை அண்மித்த கடற்பரப்பிலுள்ள பவளப்பாறைகள் சேதமடைந்து வருகின்றன. இதனாலேயே இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக வனவிலங்குகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்தது.

கடந்த 2003ஆம் ஆண்டு விசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் குறித்த கடற்பரப்பில் மீன்பிடிப்பதற்கான தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதையும் மீறிய நிலையில் மீனவர்கள் மீன்பிடித்தலில் ஈடுபட்டுள்ளதுடன் தடை செய்யப்பட்ட வலைகளையும் அதற்காக உபயோகப்படுத்தி வந்துள்ளனர்.

இதனால் குறித்த கடற்பரப்பிலுள்ள பவளப்பாறைகள் சேதமாக்கப்பட்டுள்ளதுடன் அரியவகை மீனினங்களும் அழிவடைந்து வந்துள்ளன என்று வனவிலங்குகள் பாதுகாப்பு திணைக்களம் மேலும் தெரிவித்தது.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .