2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

கிழக்கு மாகாணத்தின் நாட்டார் கவி பற்றிய ஆய்வை ஹனிபா மேற்கொள்ளகின்றது

Super User   / 2011 ஓகஸ்ட் 24 , பி.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சி.குருநாதன்)

கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களில் நாட்டார் கவி பற்றிய ஆய்வு மேற்கொள்ளப்படுகின்றது.

கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் நாட்டார் கவி பற்றிய ஆயவினை கிழக்கு பல்கலைக்கழகத்தின் தமிழ் துறை பீடாதிபதி பேராசிரியர் யோகராசாவின் மேற்பார்வையில் கலாநிதி பட்டபடிப்பை மேற்கொள்ளும் எம்.ஐ.எம்.ஹனிபா மேற்கொண்டு வருகின்றார்.

அக்கரைப்பற்று வலயத்தின் தமிழ் மொழிக்கான உதவி கல்வி பணிப்பாளராக தற்போது இவர் கடமையாற்றி வருகின்றார்.

இதற்காக வேண்டி இவர் மாகாணத்திலுள்ள மூத்த தமிழ் இலக்கியவாதிகளை  சந்திப்பதிலும் நாட்டார் கவி பற்றிய தகவல்களையும் மற்றும் தரவுகளையும் திரட்டுவதிலும் தற்போது ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .