2025 மே 08, வியாழக்கிழமை

பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான ஒன்றுகூடல்

A.P.Mathan   / 2011 செப்டெம்பர் 03 , மு.ப. 03:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்எஸ்.குமார்)

ஜெயவர்த்தன பல்கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் திருகோணமலையில் இருந்து பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான ஒன்றுகூடல் நிகழ்வொன்று நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. திருகோணமலை மாவட்ட செயலகத்தில் இந்நிகழ்வு நேற்று காலை நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் மேஜர் ஜெனரல் ரஞ்சித் சில்வா பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தார்.

சரசவி திவிசும் அபிமன் என்னும் வேலைத்திட்டமாகவே இவ்வொன்றுகூடல் நிகழ்வு மேற்கொள்ளப்பட்டது. 2010, 2011ஆம் வருடங்களுக்காக பல்கலைக்கழகங்களுக்கு தெரிவான திருகோணமலை மாவட்ட மாணவர்கள் 296 பேரும், அவர்களின் பெற்றோர்களும் இதில் பங்கெடுத்தனர்.

பல்கலைக்கழகத்திற்கு செல்லும் மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் நடந்துகொள்ள வேண்டிய முறைகள் பற்றி விரிவாக இந்நிகழ்வில் எடுத்துக்கூறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X