2025 மே 07, புதன்கிழமை

"அவசரகால சட்டம் நீக்கப்பட்டுள்ளதால் இராணுவத்தின் ஒத்துழைப்பை பெற எழுத்துமூல கோரிக்கை அவசியம்"

Menaka Mookandi   / 2011 செப்டெம்பர் 03 , பி.ப. 01:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நாட்டின் அமைதியையும் சமாதானத்தையும் நிலைநாட்டுவதற்கு இராணுவத்தினரின் உதவி பொலிஸாருக்கு தேவைப்படும் பட்சத்தில் அது குறித்து பொலிஸார் எழுத்து மூலம் அறிவிக்க வேண்டும். அவ்வாறு எழுத்து மூலமான கோரிக்கை கிடைக்கப்படும் பட்சத்திலேயே இராணுவத்தினரின் ஒத்துழைப்பு பொலிஸாருக்கு வழங்கப்படும் என்று இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்தார்.

அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டுள்ளமையினாலேயே இவ்வாறானதொரு நிலைமை ஏற்பட்டுள்ளது. இல்லாவிடின் இராணுவத்தினரின் ஒத்துழைப்பினைப் பெற்றுக்கொள்வதற்கு மேற்கண்டவாறான எழுத்து மூல கோரிக்கை விடுக்கப்படத் தேவையில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

முப்படையினரும் இணைந்து நடத்தும் போர் ஒத்திகை நிகழ்வு திருகோணமலையில் இடம்பெற்று வருகின்றது. எதிர்வரும் 6ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்த ஒத்திகை நிகழ்வினைப் பார்வையிடுவதற்காக இராணுவ தளபதி இன்று சனிக்கிழமை திருகோணமலைக்கு விஜயம் செய்தார்.

இதன்போது ஊடகவியலாளர்கள் சிலரால் முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்கு விடையளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய இராணுவ தளபதி,

"நாட்டுக்குள் சமாதானம் ஏற்படுத்தப்பட்டிருக்கின்ற போதிலும் எவ்வாறானதொரு சந்தர்ப்பங்களிலும் முகங்கொடுக்கும் வகையில் இராணுவத்தினர் தயார்ப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டுள்ளதை அடுத்து, சாதாரண சட்டங்களின் கீழ் இராணுவ நடவடிக்கைகள் எவ்வாறு முன்னெடுக்கப்பட வேண்டும் என்பது குறித்த தெளிவுபடுத்தல்களையும் இராணுவத்தினருக்கு தற்போது வழங்கி வருகின்றோம்" என்றார். (Amadoru Amarajeewa)


You May Also Like

  Comments - 0

  • Riyas Monday, 05 September 2011 03:35 AM

    நீங்கள் செய்த உதவி போதும். போய் நல்ல குறட்டை விட்டு தூங்குங்கள்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X