Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Suganthini Ratnam / 2011 செப்டெம்பர் 04 , மு.ப. 03:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கியாஸ் ஷாபி)
திருகோணமலையையும் மட்டக்களப்பையும் இணைக்கும் 5 பாலங்களின் நிர்மாணப்பணிகளை இந்த மாதம் 30ஆம் திகதிக்குள் பூர்த்தி செய்து வீதி அபிவிருத்தி அதிகாரசபையிடம் ஒப்படைக்கப்படவுள்ளன.
திருகோணமலை - மட்டக்களப்பு வீதிப் புனரமைப்பின் கீழ் 5 பாலங்களின் நிர்மாணப்பணிகளும் 99 கிலோமீற்றர் நீளமான வீதிப் புனரமைப்பும் இடம்பெற்று வருகின்றன. இதற்காக 10,500 மில்லியன் ரூபா நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
உப்பாறு, கங்கை, இறால்குழி, வெருகல், காயங்கேணி ஆகிய பாலங்களே நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் இறால்குழி, வெருகல், காயங்கேணி ஆகிய 3 பாலங்களின் நிர்மாணப்பணிகள் பூர்த்தியடைந்துள்ளன. இந்த நிலையில் உப்பாறு, கங்கை ஆகிய பாலங்களின் நிர்மாணப்பணிகளும் வீதிப் புனரமைப்பும் துரிதகதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிர்மாணப்பணிகள் நிறைவுற்றதும் திருகோணமலை - மட்டக்களப்புக்கான தற்போதைய பயணத்தில் 100 மீற்றர் தூரம் குறைவடையும். கிழக்கு மாகாணசபையின் சேவைகளைப் பெறுவதற்காக திருகோணமலைக்கு வரும் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட மக்கள் பெரிதும் நன்மையடைவர்.
மூதூர், தோப்பூர், வெருகல் பிரதேச மக்களும் தரைவழிப்பாதையூடாக குறுகிய நேரத்தில் செல்ல இலகுவாக்கப்பட்டுள்ளது.
kathiravan Sunday, 04 September 2011 06:07 PM
1௦௦ மீற்றர் தூரம் குறைவடைவதால் பாரியளவு பிரயோசனம் இல்லை. 1௦௦ கி்.மீற்றர் என்றால் பிரயோசனம்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
4 hours ago