2025 மே 07, புதன்கிழமை

ரொட்டவௌ முஸ்லிம் வித்தியாலயத்தில் முதல் தடவையாக புலமைப்பரிசில் பரீட்சையில் மூன்று மாணவர்கள் சித்தி

Super User   / 2011 செப்டெம்பர் 22 , மு.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம் பரீட்)      

திருகோணமலை மாவட்ட எல்லை கிராமமான ரொட்டவௌ முஸ்லிம் வித்தியாலயத்தில் வரலாற்றில் முதல் தடவையாக இம்முறை நடைபெற்ற ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் மூன்று மாணவர்கள் சித்திபெற்றுள்ளனர்.

இவ்வருடம் 27 மாணவர்கள் பரீட்சையில் தோற்றிய போதும் மூன்று மாணவரகளே முதல் தடவையாக சித்தி பெற்றுள்ளனர்.

றஹீம் பர்வஸ் முஸரப் - 164 புள்ளிகள், முகம்மது சாலின் சுமையா – 161 புள்ளிகள் இஸ்மாயில் பாத்திமா – 161 புள்ளிகளை பெற்று இம்மூவருமே குறித்த பாடசாலைக்கு  பெருமை சேர்த்துள்ளனர்.

கடந்த 1954ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலையில் 1992ஆம் ஆண்டு முதல் மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0

  • muhammed Thursday, 22 September 2011 09:49 PM

    கற்பித்த ஆசிரியர்களுக்கு எமது பாராட்டுக்கள்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X