2025 மே 07, புதன்கிழமை

திருமலையில் சிறுவர் தின நிகழ்வு

Suganthini Ratnam   / 2011 ஒக்டோபர் 02 , மு.ப. 11:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சி.குருநாதன்)

திருகோணமலை, பட்டணமும் சூழலும் பிரதேச செயலகத்தினால் சிறுவர் தின நிகழ்வுகள் நேற்று சனிக்கிழமை அலஸ்தோட்டம் ஸ்ரீமாதுமையம்பாள் வித்தியாலயத்தில் கொண்டாடப்பட்டன.  

பிரதேச செயலகப் பிரிவிலுள்ள சிறுவர் கழகங்களுக்கிடையேயான போட்டியில் சோனகவாடி கிராம சேவையாளர் பிரிவிலுள்ள
யங் மூன் சிறுவர் கழகம் சிறந்த விளையாட்டுக் கழகமாக தெரிவு செய்யப்பட்டது.

இந்த நிகழ்வுக்கு பட்டணமும் சூழலும் பிரதேச செயலாளர் சசிதேவி ஜலதீபன் தலைமை வகித்தார். முதன்மை அதிதிகளாக மாகாண சிறுவர் பராமரிப்பு நன்னடத்தை ஆணையாளர் இஷக்ன் விஜயதிலகாவும்  கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பிரியந்த பிரேமகுமாரவும்  கௌரவ அதிதியாக திருகோணமலை வலயக் கல்விப் பணிப்பாளர் கி.முருகுப்பிள்ளையும் கலந்து
கொண்டனர்.

சிறந்த சிறுவர் கழகத்திற்கான பரிசை முதன்மை அதிதிகளில் ஒருவரான பிரியந்த பிரேமகுமார யங் மூன் சிறுவர் கழகத்திற்கு வழங்கினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X