2025 மே 07, புதன்கிழமை

தேசிய இளைஞர் விருது வழங்கும் நிகழ்வு

Kogilavani   / 2011 ஒக்டோபர் 09 , மு.ப. 09:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரமன்,கஜன்)
இளைஞர்களுடைய கலாசார திறன்களை ஊக்குவிக்கும் முகமாக தேசிய இளைஞர் சேவை மன்றம் வருடாந்தம் நடத்தும் தேசிய இளைஞர் விருது வழங்கும் நிகழ்வு திருகோணமலை கோணேஸ்வரா இந்துக்கல்லூரி மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதன்போது, திருகோணமலை மாவட்ட மட்டத்தில் இளைஞர் விருது விழா போட்டிகளில் வெற்றியீற்றிய இளைஞர்களுக்கான விருதுகள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில், புத்த சாசன பிரதி அமைச்சர் கே.டி.எஸ்.குணவர்தன முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு விருதுகளை வழங்கி வைத்தார்.

மாவட்ட மட்டத்தில் முதல் இடங்களை பெற்ற வெற்றியாளர்கள் இம்மாத இறுதியில் கொழும்பு தேசிய இளைஞர் சேவை மன்றத்தில் இடம்பெறவுள்ள தேசிய மட்ட போட்டிகளில் பங்கு பற்றவுள்ளனர் எனவும் அப்போட்டிகளில் வெற்றி பெறும் இளைஞர்களுக்கு பணப்பரிசுடன் கூடிய தேசிய இளைஞர் விருது வழங்கப்படும் என்றும் திருகோணமலை மாவட்ட இளைஞர் சேவை மன்ற உதவிப்பணிப்பாளர் கே.பி.திஸாநாயக்க கருத்து தெரிவித்தார்.

இந்நிகழ்வில், சிறப்பு விருந்தினர்களாக கிழக்கு மாகாண சபை அங்கத்தவர் நிசாந்த பத்திரன, மாகாண கட்டிடத்திணைக்கள பணிப்பாளர் கே.வேல்மாணிக்கம், தேசிய இளைஞர் சேவைகள் மன்ற பிரதி பணிப்பாளர் பிரபா திலியனகே ஆகியோர் கலந்து கொண்டு விருதுகளையும் வழங்கி வைத்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X