2025 மே 07, புதன்கிழமை

மூதூர் கிழக்கு விவசாயிகளுக்கு உபகரணங்களும் உப உணவுப் பயிர்களும்

Super User   / 2011 ஒக்டோபர் 09 , பி.ப. 07:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கஜன்)

மூதூர் கிழக்கு விவசாயிகளுக்கு விவசாய பாதுகாப்புக்கான முட்கம்பி சுருள்களும், உபகரணங்களும், உப உணவுப் பயிர்களும், கிழக்கு மாகாண விவசாய அமைச்சினால் வழங்கி வைக்கப்பட்டன.
 
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந் நிகழ்வில் கிழக்கு  மாகாண விவசாய கால்நடை அபிவிருத்தி அமைச்சர் கலாநிதி துரையப்பா நவரெ்ணராஜா கலந்து கொண்டு இவற்றினை வழங்கி வைத்தார். கிழக்கு மாகாண ஆளுநரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் இருந்து முட்கம்பி சுருள்கள். நிலக்கடலை, உழுந்து போன்றை  இவ்வாறு வழங்கி வைக்கப்பட்டன.

கடந்தகால போர் சூழலினால் பாதிக்கப்படட கிராமங்களான பெரிய நெய்யந்தை, சின்ன நெய்யந்தை,சீனன்வெளி, தில்லங்கேணி, வேம்படித்தோட்டம், கயமுந்தான், அம்மன்நகர், போன்ற கிராமங்களைச் சுர்ந்தவர்களுக்கு இவை வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் திருகுாணமலை மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர் பு.உகநாதன், மற்றும் விவசாய திணைக்கள அதிகார்களும், போதனாசிரியர்களும், கிராமிய விவசாய சம்மேளன பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X