Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Kogilavani / 2011 ஒக்டோபர் 11 , மு.ப. 04:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கஜன்)
கிழக்கு மாகணத்தில் உள்ள முன்பள்ளி ஆசிரியர்கள் ஒன்றிணைந்து 'தேசிய முன்பள்ளி ஆசிரயர் சங்கம்' ஒன்றினை ஆரம்பித்துள்ளனர். இச்சங்கமானது தேசிய தொழிலாளர் காங்கிரஸுடன் இணைந்து கொண்டுள்ளது.
இது தொடர்பான மாநாடு திருகோணமலை புனித மரியாள் கல்லூரியில் நேற்று திங்கட்கிழமை மாலை நடைபெற்றது.
கிண்ணியாவிஷன், பீட் ஸ்ரீலங்கா, சொலிடார் நிறுவனங்கள் இணைந்து ஏற்பாடு செய்த இம் மாநாட்டில் மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை, மாவட்டங்களைச் சார்ந்த 620 தொண்டர் முன்பள்ளி ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். நைஜீரியா, செனகல், பிரான்ஸ் ஆகிய நாடுகளை சேர்ந்த, செனியா (Training Centre of Educational Methodolgy) நிறுவனத்தின் உறுப்பினர்களுமான நான்கு பேரும் இம்மாநாட்டில் கலந்துகொண்டனர்.
இம்மாநட்டில், சிறப்பு விருந்தினராக கிழக்கு மாகாண சபையின் தவிசாளர் எம்.எச.பாயிஸ் கலந்துகொண்டார்.
இதன்போது, முன்பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்று கிழக்கு மாகாண சபைக்கு வழங்கி வைக்குமாறு தவிசாளர் பாயிஸிடம் முன்பள்ளி ஆசிரியர் சங்கத்தின் தலைவர் மங்களராஜினி சதானந்தம் கையளித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago