Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Menaka Mookandi / 2011 ஒக்டோபர் 14 , மு.ப. 06:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.பரீட்)
இந்திய அரசினால் வழங்கப்பட்ட கணனிகளை கிழக்கில் ஆயிரம் பாடசாலைக்கு பகிர்ந்தளிக்கும் திட்டத்தின் கீழ் கிண்ணியா பிரதேச பாடசாலைகளுக்கு கணனி வழங்கும் நிகழ்வொன்று இன்று வெள்ளிக்கிழமை காலை கிண்ணியா தி- அல்-அக்ஸா கல்லூரியில் கிண்ணியா கோட்டக்கல்வி அதிகாரி கே.ஏ.அஹது தலைமையில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை தவிசாளர் சட்டத்தரணி எச்.எம்.எம்.பாயிஸ் மற்றும் சிறப்பு அதிதிகளாக கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், முதல்வருமான மௌலவி எஸ்.எல்.எம்.ஹஸன் (அஷ்ஹரி), கிண்ணியா வலயக்கல்வி அலுவலக பதில் வலயக் கல்விப் பணிப்பாளர்,ஏ.நசூர்ஹான் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இவ்வைபவத்தில் கிண்ணியா கோட்ட பாடசாலைகளான தி-அல்-அக்ஸா கல்லூரி, கிண்ணியா மத்திய கல்லூரி, ரீ.பி.ஜாயா வித்தியாலயம்,இடிமண் அல்-மின்ஹாஜ் வித்தியாலயம் பெரிய கிண்ணியா ஆண்கள் வித்தியாலயம், ஈச்சந்தீவு விபுலானந்தர் வித்தியாலயம், அப்துல் மஜீத் வித்தியாலயம், அல்-புர்ஹான் வித்தியாலயம், சுமைய்யா அரபிக்கல்லூரி போன்ற பாடசாலைகளுக்கு இன்று கணனி விநியோகிக்கப்பட்டன. இந்த நிகழ்வில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago