Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Suganthini Ratnam / 2011 ஒக்டோபர் 16 , மு.ப. 04:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.பரீட்)
திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா பிரதேச செயலக சமுர்த்திப் பிரிவினரால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள மாபெரும் சந்தை எதிர்வரும் 19ஆம் 20ஆம் திகதிகளில் கிண்ணியா நகரசபை மைதானத்தில் நடைபெறவுள்ளது.
கிண்ணியா, தம்பலகாமம், கந்தளாய் ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த சமுர்த்திப் பயனாளிகள் கலந்து கொள்ளவுள்ளனர். உற்பத்திப் பொருட்கள் இந்த இச்சந்தையில் விற்பனை செய்யப்படவுள்ளன.
இதன் முதல் நாள் நிகழ்வில் பிரதம விருந்தினராக திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக்கும் ஏனைய விருந்தினர்களாக கிழக்கு மாகாணசபைத் தவிசாளர் எச்.எம்.எம்.பாயிஸ், கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் சபை முதல்வருமான எஸ்.எல்.எம்.ஹஸன் மௌலவி, மாகாணசபை உறுப்பினர் எம்.ஏ.எம்.மஹ்ரூப் மற்றும்
பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.
இரண்டாம் நாள் நிகழ்வில் பிரதம அதிதியாக திருகோணமலை மேலதிக அரசாங்க அதிபர் ஏ.அருள்ராசா மற்றும் திருகோணமலை சமுர்த்தி உதவி ஆணையாளர் உட்பட பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago