Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Suganthini Ratnam / 2011 ஒக்டோபர் 16 , மு.ப. 06:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.பரீட்)
இரவு நேரங்களில் கடலுக்குச் சென்று வரும் மூதூர் மீனவர்களின் மீன்களையும் கடல் உணவுகளையும் கடந்த மூன்று நாட்களாக இனந்தெரியாத கும்பலொன்று பறித்துச் செல்வதாக மூதூர் பொலிஸ் நிலையத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை மீனவர்களினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
நேற்று சனிக்கிழமை இரவு மீனவர்களினால் மூன்று வள்ளங்களில்; கொண்டுவரப்பட்ட சுமார் 1,500 கிலோ நிறையுடைய கணவாய் மீனை கத்தியைக் காட்டி மிரட்டி அபகரிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
அவ்வாறே நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவும் ஒரு வள்ளத்தில் கொண்டுவரப்பட்ட சுமார் 11 கிலோ அறக்குலா மீன்களையும் மற்றுமொரு வள்ளத்தில் கொண்டு வரப்பட்ட சுமார் 50 கிலோ பாரை மீன்களையும் இன்னுமொரு வள்ளத்தில் கொண்டுவரப்பட்ட 30 கிலோ கணவாய் மீன்களையும் இனந்தெரியாத கும்பல் அபகரித்துள்ளதாக மீனவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இது தொடர்பில் பாதிக்கப்பட்ட மீனவர்கள் 119 என்ற தொலைபேசி இலக்கம் மூலம் பொலிஸாருக்கு முறைப்பாடு செய்த நிலையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago