Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Kogilavani / 2011 ஒக்டோபர் 22 , மு.ப. 05:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நல்லூர் மற்றும் நீனாக்கேணியை அண்டிய பகுதிகளில் மீளக் குடியேறிய மக்களை கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் நேற்று வெள்ளிக்கிழமை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
நானாக்கேணி நல்லூர் மலைமுந்தல் மலைமகள் வித்தியாலயத்தில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் மக்கள் எதிர்நோக்குகின்ற உடனடி பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டது.
அத்தோடு தொழில் உபகரணங்களும் முதலமைச்சரினால் வழங்கி வைக்கப்பட்டன.
சமூக மேம்பாடடு அமைப்பு அம் மக்களுக்கு ஏற்படுத்தி கொடுத்துள்ள குடிநீர் மற்றும் மலசலகூட வசதிகளையும் மக்களுடனான இச்சந்திப்பின்போது முதலமைச்சர் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைத்தார்.
இங்கு விசேடமாக நிலவுகின்ற குடிநீர் பிரச்சினை, போக்குவரத்து, மின்சாரம், மருத்தவ வசதி, காணி உரிமைப்பத்திரம், மீனவர் பிரச்சினை, ஆசிரியர் பற்றாக்குறை போன்ற பல பிரச்சினைகள் மதலமைச்சரின் கவனத்திற்கு இதன்போது கொண்டுவரப்பட்டது. மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளுக்கான உரிய தீர்வு வழங்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மூதூர் பிரதேச தவிசாளர் ஹாரிஸ், சமூக மேம்பாட்டு அமைப்பின் பணிப்பாளர், பிரதேச செயலாளர், பாடசாலை அதிபர்கள், கிராம சேவையாளர்கள் கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர்கள் உட்பட கிராம மக்களும் கலந்துகொண்டனர்.
pragash Monday, 24 October 2011 12:18 PM
தமிழ் தேசியம் எம் கைக்கு கிடைக்க இருக்கும் இத் தருணத்தில் எம் மக்களின் நலனில் அக்கறை செலுத்தும் முதலமைச்சருக்கு எனது நன்றிகள்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
35 minute ago
40 minute ago