Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Kogilavani / 2011 நவம்பர் 01 , மு.ப. 06:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கஜன்)
திருகோணமலை மாவட்ட சாரணர் சங்கம் நடத்திய குருளைச்சாரணர் வெளிக்கள தினம் ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி மைதானத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது.
10 சாரணர் குழுக்களைச் சேர்ந்த 215 குருளையர்களும் 15 சாரணர் தலைவர்களும் இதில் பங்கு கொண்டிருந்தனர். இதன்போது, குருளையர்களின் திறன்களை வெளிப்படுத்தும் போட்டிகளும் இங்கு இடம்பெற்றன.
இந்நிகழ்வில், திருகோணமலை வலயக் கல்வி பணிப்பாளர் கிறிஸ்டி முருகுப்பிள்ளை பிரதம அத்தியாகவும், ஓய்வு நிலை அதிபர் நா.இராஜநாதன் கௌரவ விருந்தினராகவும் கலந்துகொண்டனர்.
இவ்வருடம் நடைபெற்ற 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் தகைமை பெற்ற 21 குருளை சாரணர்களும், 100 புள்ளிகளுக்கு மேல் பெற்ற 82 குருளையர்களும் இதன்போது பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
Mohan Parameswaran Wednesday, 02 November 2011 04:06 PM
”தனக்கும் பிறருக்கும் பயனுள்ள வகையில் வாழக் கூடிய நற்பிரஜைகளை உருவாக்கும் உன்னத பணியை ஆற்றும் இவ் அமைப்பு பாடசாலைகளில் கல்வி பயிலும் சகல சிறார்களும் அங்கம் வகிக்கக் கூடிய வகையில் செயற்படுத்தப்பட வேண்டும்.”
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
25 minute ago
30 minute ago