Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Menaka Mookandi / 2011 நவம்பர் 01 , மு.ப. 09:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரமன்)
தலை சேதமாக்கப்பட்டிருந்த தந்தை செல்வாவின் உருவச்சிலை சீரமைக்கப்பட்டு இன்று பிற்பகல் 3 மணிக்கு திறந்துவைக்கப்படவுள்ளது.
திருகோணமலை சிவன்கோயிலுக்கு அண்மையில் 34 வருடங்களுக்கு முன்னர் பிரதேச இளைஞர்களாலும், தமிழர் விடுதலைக்கூட்டணியின் அனுசரணையுடனும் அமைக்கப்பட்டிருந்த தந்தை செல்வநாயகத்தின் உருவச்சிலையின் தலை இனந்தெரியாதோரால் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சேதப்படுத்தப்பட்டது.
இந்நிலையில் திருகோணமலை தமிழ் மக்கள் மத்தியிலும் வடக்கு கிழக்கின் தமிழர் பிரதேசங்களிலும் இச்செய்தி பெரும் விசனத்துக்கும் கண்டனத்துக்கும் உள்ளாகியிருந்தது.
இதனை அடுத்து திருகோணமலை பொலிஸ் பிரிவின் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பந்துல விஜயவர்த்தனவின் அவசர உத்தரவிற்கிணங்க திருகோணமலை தலைமைப்பொலிஸ் நிலைய பொறுப்பாதிகாரியின் வேண்டுகோளின்படி திருகோணமலை நகரசபை தலைவர் க.செல்வராஜாவின் நேரடி மேற்பார்வையின் கீழ் சேதப்படுத்தப்பட்ட சிலையின் தலைபகுதி மீளவும் சீரமைக்கபட்டு இன்று பிற்பகல் 3.00 மணிக்கு மக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்படவுள்ளது.
சிலை சேதமாக்கப்பட்டமை குறித்து திருகோணமலை பொலிஸ் தரப்பினர் மிகுந்த கவலையும் கண்டனமும் தெரிவித்துள்ள அதேவேளை சிலை சேதமாக்கப்பட்ட செய்தி தெரிந்த நேரத்திலிருந்து சிலை அமைந்துள்ள பகுதியில் பாதுகாப்பிற்கு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இச்சிலை 1983ஆம், 1987ஆம் மற்றும் 1990ஆம் ஆண்டுகளில் வடக்கு கிழக்கிலும் குறிப்பாக திருகோணமலையிலும் இடம்பெற்ற இன வன்முறைகளின் போது பல தடவை சேதமாக்கப்பட்டு 1995ஆம் ஆண்டு மீளவும் சீரமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
meenavan Tuesday, 01 November 2011 08:51 PM
செல்வநாயகம் ஐயாவினது தலைக்கு பிரதியீடாக செல்வனாயக்க ஹாமுவின் தலைதான் பிரதியீடா? என் பார்வையில் பிழையிருந்தால் கருத்தாளர்கள் மன்னிக்கவும்.
Reply : 0 0
mbm Tuesday, 01 November 2011 10:07 PM
இது செல்வநாயகம் ஐயாவின் சிலை போல் தெரியலையே... யார ஏமாற்ற பாக்காங்க இவங்க? ரொம்பத்தான் கோல்மால் பண்றாங்கப்பா.
Reply : 0 0
amal Thursday, 03 November 2011 10:38 AM
மனிதர்களை கொன்றார்கள். இப்ப சிலையையும் விட மாட்டார்கள் போல.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
29 minute ago
34 minute ago