Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Super User / 2011 நவம்பர் 05 , மு.ப. 11:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கியாஸ் ஷாபி)
எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு கிண்ணியா தள வைத்தியசாலையின் நீரிழிவு கல்வியூட்டல் பிரிவு கிண்ணியா கல்வி வலய பாடசாலை மாணவர்களுக்கிடையே கட்டுரை, சிறுகதை மற்றும் ஓவிய போட்டிகளை நடாத்தவுள்ளது.
பாடசாலை மாணவர்களுக்கிடையே நீரிழிவு பற்றியும் ஆரோக்கியமான உணவு தெரிவு பற்றியும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த போட்டி நிகழ்ச்சிகளில் தரம் 9 தொடக்கம் தரம் 13 வரையான வகுப்பு மாணவர்கள் பங்குபற்ற முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்டுரை போட்டி நீரிழிவற்ற சமுதாயத்தைக் கட்டியெழுப்புவோம், நீரிழிவு ஓர் ஆட்கொல்லி நோய், நீரிழிவும் உணவு பழக்க வழக்கங்களும் என்ற தலைப்புக்களிலும் சிறுகதை போட்டி நீரிழிவு சம்மந்தமான சமுதாய விழிப்புணர்வு என்ற கருப்பொருளிலும் சித்திரம் வரைதல் போட்டி நீரிழிவு நோய் வராமல் தடுப்போம், நிறையுணவினை உட்கொள்வதால் நீரிழிவு நோயிலிருந்து பாதுகாப்பு பெறலாம் என்ற தலைப்புக்களிலும் நவம்பர் 10ஆம் திகதிக்கு முன்னர் கிண்ணியா வலய கல்வி அலுவலகத்துக்கு மாணவர்கள ஆக்கங்களை அனுப்புப்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
29 minute ago
34 minute ago