2025 மே 07, புதன்கிழமை

மருத்துவ, பொறியல்த்துறைக்கு தெரிவான மாணவர்களுக்கு பாராட்டு

Suganthini Ratnam   / 2011 நவம்பர் 06 , மு.ப. 08:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.பரீட்,கியாஸ் ஷாபி)

மருத்துவ மற்றும் பொறியியல்பீடத்திற்கு தெரிவுசெய்யப்பட்ட 10 மாணவர்களை பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு கிண்ணியா பொதுநூலக கேட்போர் கூடத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கிழக்கு வள அபிவிருத்தி மையத்தின் தவிசாளர் டாக்டர் ஏ.எச்.எம்.சமீம் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

மருத்துவத்துறைக்கு பளீலுள்ளா - முகம்மது சுக்ரி, முகம்மது இல்யாஸ் - முகம்மது ஹாரித், முகம்மது கலாம் - பாத்திமா றிகானா, அபூல் கலாம் - முகம்மது நஸ்மி, முகம்மது நஸீர் - முகம்மது நிப்ராஸ், காதர் பாச்சா- முகம்மது, சமீயா மௌஜுத், அப்துல் காசின் ஹாஜி - முகம்மது ஆசிக், ஆகியோர் தெரிவாகினர்.

பொறியியல்த்துறைக்கு முகைதீன் பிச்சை - முகம்மு சுகைல், அப்துல் றாசீக் - முகம்மது றிக்காஸ் ஆகியோர் தெரிவாகினர்.  இவர்கள் இன்று பாராட்டிக் கௌரவிக்கப்பட்டனர்.

இந்தநிகழ்வில், பிரதம விருந்தினராக கிழக்கு மாகாண கூட்டுறவு அபிருத்தி ஆணையாளர் எம்.சீ.எம்.சரீப்,  கௌரவ விருந்தினராக சிறுவர் நன்னடத்தை ஆணையாளர் எம்.முபாரக், கிண்ணியா வலய பிரதிக் கல்விப்பணிப்பாளர் ஏ.எம்.அப்துல்லா உட்பட பலர் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X