Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2011 நவம்பர் 18 , மு.ப. 03:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கஜன்)
திருகோணமலை மாவட்டத்திற்கான விஜயத்தை ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதி சொர்யா பெனடிக்ற் கிறிஸ்டியன், எயிட் நிறுவனத்தின் பிரதிநிதி பிறையன் மார்டின் ஆகியோர் நேற்று வியாழக்கிழமை மேற்கொண்டனர்.
ஒபர் சிலோன் நிறுவனத்திற்கு விஜயம் செய்த இவர்கள் மக்கள் மன்றத்தின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடினர். இதன்போது சம்பூர் பிரதேசத்தின் நிலைமைகள் பற்றியும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
இதேவேளை, ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதி, கிறிஸ்டியன் எயிட் நிறுவனத்தின் பிரதிநிதி ஆகியோருடன் ஒபர் நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட மக்கள் மன்ற சந்திப்பு நடைபெற்றது.
இதன்போது, 1972ஆம் ஆண்டுக்கு முன்னர் வசதி படைத்தவர்கள் தமது காணி உரிமைக்கான ஆவணங்களைப் பெற்றிருந்தனர். ஆனால் வசதிகளற்ற ஏழைகள் பணத்தை செலவழித்து காணி உரிமைக்கான ஆவணங்களைப் பெற்றுக்கொள்ளத் தவறிவிட்டனர்.
இவ்விடயத்தில் அதிகாரிகளின் அசமந்தப்போக்கும் இவ் உரிமையை பெற்றுக்கொடுப்பதில் தடையாக இருந்திருக்கிறது. இதன் காரணமாகவே இன்று சம்பூர் பிரதேசத்திலிருந்து வெளியேறியவர்கள் காணி உரித்து அற்றவர்களாக கருதப்படுகின்றார்கள்.
நீண்டகாலமாக காணிகளில் விவசாயம் செய்து வந்தவர்கள் காணி உரிமை இல்லாத நிலையிலுள்ளனர். இவர்களுக்கான காணி உரிமைகள் பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும்.
இவ்வாறு மூதூர் இடம்பெயர்ந்தோர் சங்கத் தலைவர் க.நாகஸ்வரன் இவர்களிடம் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
29 minute ago
39 minute ago
1 hours ago