2025 மே 03, சனிக்கிழமை

திருமலையில் முதலிடங்களை பெற்ற உ.த மாணவர்களுக்கு புலமைப்பரிசில்

Kogilavani   / 2012 ஜனவரி 28 , மு.ப. 09:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரமன், எம்.பரீட், கஜன்)

திருகோணமலை மாவட்டத்தில் 2011 ஆண்டு க.பொ.த உயர்தர பரீட்சையில் சித்தியடைந்து மாவட்ட மட்டத்தில் முதல் 4 இடங்களையும் பெற்றுக்கொண்ட 15 மாணவர்களுக்கு புலமைப்பரிசில்கள் வழங்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை உவர்மலை விவேகானந்த கல்லூரியில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், இராணுவத்தளபதி லெப்னினன்ட் ஜெனரல் ஜெகத் ஜயசூரிய கலந்துகொண்டு மாணவர்களுக்கான புலமைப்பரிசில்களை வழங்கி வைத்தார்.

22 வது படைப்பிரிவின் திருகோணமலை தலைமையகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் கணித, விஞ்ஞான, வர்த்தக, மற்றும் கலைப் பிரிவுகளில் மாவட்ட மட்டத்தில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்கள் புலமைபரிசில் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில், இராணுவத் தளபதி, 22வது படைப்பிரிவின் கட்டளை அதிகாரி, கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் உட்பட பலர்  கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0

  • riswan Sunday, 29 January 2012 07:06 PM

    இராணுவ மயமாக்கம் இலங்கையில் அதிகரித்துள்ளது.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X