2025 மே 03, சனிக்கிழமை

கடத்தப்பட்டதாக கூறப்பட்ட சத்தியசீலன் அச்சுவேலியில் மறைந்திருந்த போது கைது

Super User   / 2012 ஜனவரி 29 , மு.ப. 10:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

(அமதோரு அமரஜீவ)

இனந்தெரியாத சிலரால் கடத்தப்பட்டதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்ட கொழும்பு மாநகரபை மற்றும் பல நிறுவனங்களின் மொழிபெயர்ப்பாளராக கடமையாற்றி வந்த சத்தியசீலன் பாக்கியராஜ் கடந்த 23ஆம் திகதி இரவு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ். அச்சுவேலி பிரதேசத்தில் 34 வயதான சத்தியசீலன் பாக்கியராஜ் மறைந்திருந்த போதே கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

கொழும்பு மாநகரபை மற்றும் பல நிறுவனங்களின் மொழிபெயர்ப்பாளராக கடமையாற்றும் இவர், விடுமுறையை கழிப்பதற்காக திருகோணமலைக்கு சென்றபோது இனந்தெரியாதோர் சிலரால் வெள்ளை வானில் கடத்தப்பட்டதாக அவரது மனைவி திருகோணமலைஇ துறைமுகப் பொலிஸ் நிலையத்தில் கடந்த ஜனவரி 13ஆம் திகதி முறைப்பாடு செய்திருந்தார்.

இதனையடுத்து, திருகோணமலை பிரிவு பிரதி பொலிஸ் மா அதிபர் ரவீந்திர வைத்தியலங்கார மற்றும் திருகோணமலை பிரிவு பொலிஸ் அத்தியட்சகர் பந்துல விஜயவர்தன ஆகியோரின் பணிப்புரைக்கமைய குற்றவியல் நடவடிக்கைகளுக்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகர் அநுர பிரேமசந்த மேற்கொண்ட விசாரணைகளை மேற்கொண்டனர்.

இதன்போது, காணாமல் போனதாக கூறப்பட்ட சத்தியசீலன் பாக்கியராஜ, அவரின் கையடக்க தொலைபேசியின் உதவியுடனேயே கைது செய்யப்பட்டுள்ளார்.

தனது மனைவி மற்றும் இரு பிள்ளைகளிடம் காணாமல் போனது போன்று நடித்த பின்னர் அச்சுவேலி பிரதேச பெண்ணொருவரை திருமணம் செய்ய அவர் தயாராகியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.

சத்தியசீலன் பாக்கியரா திருமணம் செய்யவிருந்த பெண்மனியின் தயாரே, இது தொடர்பான வாக்குமூலத்தை அளித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திருகோணமலை துறைமுக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உபாலி பி.நவரம்பாவனவின் அறிவுறுத்தலுக்கிணங்க பொலிஸ் இன்ஸ்பெக்டர் கே.எம்.நந்தல மற்றும் ஐ.சுரேஷ் குமார் ஆகியோர் மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடை செய்தி:

மொழிபெயர்ப்பாளர் பா.சத்தியசீலன் இனந்தெரியாதோரால் கடத்தல்


You May Also Like

  Comments - 0

  • tamilan Monday, 30 January 2012 01:30 AM

    முந்திய செய்திக்கு கமெண்ட்ஸ் கொடுத்ததவர்கள் பாவம்.

    Reply : 0       0

    kundaanthady Monday, 30 January 2012 05:46 AM

    தமிழன்.....யாருக்கு தெரியும் எந்த புத்துக்குள்ளே என்ன பாம்பு இருக்குதென்று.... இதுவும் ஒருவகை பாம்பு தான்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X