2025 மே 03, சனிக்கிழமை

முன்பள்ளி மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

Kogilavani   / 2012 பெப்ரவரி 02 , பி.ப. 02:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)
கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவில் உள்ள முன்பள்ளி பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள், பாடசாலை தளபாடங்களை முன்பள்ளி ஆசிரியர்களிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று   வியாழக்கிழமை  கிண்ணியா பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

கிண்ணியா பிரதேச செயலாளர் சி. கிருஷ்ணேந்திரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிண்ணியா பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழு தலைவரும், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ்.தௌபீக் கலந்து கொண்டு இப் பொருட்களை வழங்கி வைத்தார்.

இவ்வைபவத்தில் கம நெகும திட்டத்தின் கீழ் சுமார் 4 இலட்சம் ரூபா பெறுமதியான கற்றல் உபகரணங்கள், மற்றும் தளபாடங்கள் சுமார் 40 பாடசாலைகளுக்கு பகிர்ந்து வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X