2025 மே 03, சனிக்கிழமை

மூதூரில் கடைத்தொகுதி அமைக்க நடவடிக்கை

Suganthini Ratnam   / 2012 பெப்ரவரி 10 , மு.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(முறாசில்)

திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பஸ் தரிப்பு நிலையத்திற்கு அருகாமையில் அங்காடி வியாபாரிகளுக்கான கடைத்தொகுதியொன்றை அமைப்பதற்கான வேலைகள் நேற்று வியாழக்கிழமை மாலை ஆரம்பித்துவைக்கப்பட்டன.

வடக்கு, கிழக்கு மாகாண உள்ளூராட்சி சேவைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் நிதியொதுக்கீட்டின் கீழ் 20 மில்லியன் ரூபா  செலவில் இக்கடைத்தொகுதி அமைக்கப்படவுள்ளது.  இக்கடைத்தொகுதிக்கான ஆரம்ப வேலைகள் மூதூர் பிரதேசசபை தவிசாளர் ஏ.எம்.ஹரீஸ் தலைமையில் நடைபெற்றது.

மூதூர் பிரதான வீதி விஸ்தரிக்கப்பட்டதைத் தொடர்ந்து தமது வியாபாரத்தை மேற்கொள்வதில்  பெரும் சிரமத்தை எதிர்நோக்கி வந்த  அங்காடி வியாபாரிகள் இக்கடைத்தொகுதிக்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதில் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X