2025 மே 03, சனிக்கிழமை

நாடு, நகர சட்டமூலம்; கிழக்கு மாகாண சபை அமர்வு ஒத்திவைப்பு

Super User   / 2012 பெப்ரவரி 13 , மு.ப. 08:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(றிப்தி அலி)

எதிர்க்கட்சி உறுப்பினர்களின் குழப்ப நிலையையடுத்து கிழக்கு மாகாண சபையின் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற விசேட அமர்வு பெப்ரவரி 28ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண சபையில் சமர்ப்பிக்கப்பட்ட நாடு மற்றும் நகரத் திட்டமிடல் திருத்தச் சட்டமூலம் சட்டவிரோதமானது என தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் எதிர்த்தனர்.

இதனால் சபை அமர்வு 10 நிமிடத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் கூடிய சபையை எதிர்க்கட்சி உறுப்பினர்களின் ஒழுங்கு பிரச்சினை மற்றும் சட்ட பிரச்சினை ஆகியவற்றை எழுப்பியமையால் முதலமைச்சர் சந்திரகாந்தனின் வேண்டுகோளுற்கிணங்க சபை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைப்பதாக தவிசாளர் எச்.எம்.எம்.பாயிஸ் அறிவி;த்தார்.

கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிஇ உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ் மற்றும் அமைச்சர் ரிசாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள நாடு மற்றும் நகரத் திட்டமிடல் திருத்தச் சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனையடுத்து கடந்த சனிக்கிழமை பொருளாதார அபிவிருத்தி அமைச்சருடன் இடம்பெற்ற சந்திப்பின் போது திருத்தங்கள் மேற்கொள்வது என வழங்கிய உறுதிமொழியுடன் இதற்கு ஆதரவு வழங்கினர்.

இந்நிலையிலேயே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட கிழக்கு மாகாண சபையின் அனைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களும் இச்சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0

  • pasha Monday, 13 February 2012 07:35 PM

    முஸ்லிம் காங்கிரஸ் எதிர்க்கட்சியா இல்லை அரச கட்சியா ? இல்லை இரண்டுமா ?

    Reply : 0       0

    meenavan Monday, 13 February 2012 09:03 PM

    @pasha. அவர்கள் மதில் மேல் பூனை, தராசு கனதியாகும் பக்கம் துவண்டு விடுவார்கள்.

    Reply : 0       0

    pottuvilan Monday, 13 February 2012 09:42 PM

    கணம், ஆளும் கட்சி உறுப்பினர்களே எந்த விதமான உறுதிமொழிக்கும் செவிசாய்க்க வேண்டாம். அதன் பின் விளைவு உங்களுக்கு நன்றாக தெரியும். இது ஒரு திட்டமிட்ட கபட செயல்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X