2025 மே 03, சனிக்கிழமை

கிண்ணியா பொலிஸ் பிரிவின் நடாமாடும் சேவை

Kogilavani   / 2012 பெப்ரவரி 25 , மு.ப. 08:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)

கிண்ணியா பொலிஸ் பிரிவின் நடாமாடும் சேவையொன்று கிண்ணியா கச்சக் கொட்டித் தீவு தி/ அந் நஜாத் மகா வித்தியாலயத்தில் இன்று சனிக்கிழமை காலை இடம்பெற்றது.

சிவில் பாதுகாப்பு சம்மேளனத்தின் தலைவர் எம்.எம்.ஏ.ஜவாத் ஏற்பாட்டில் கிண்ணியா பொலிஸ் பொறுப்பதிகாரி அசோக் ஹெட்டியாரச்சி தலைமையில் இந்நடமாடும் சேவை இடம்பெற்றது.

இதன்போது, வீதி போக்குவரத்து ஒழுங்கு முறைகள், டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு, ஆயூர்வேத, ஆங்கில வைத்திய சிகிச்சை,  மாவட்ட வைத்திய அதிகாரி பிரிவு, பொலிஸ் முறைப்பாட்டு பிரிவு, தேசிய நீர் வழங்கள் போன்ற பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டு மக்களது தேவைகள்  நிறைவேற்றி கொடுக்கப்பட்டன.

இந்நிகழ்வில், கலந்து கொண்டோருக்கு மரக்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டன.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X