2025 மே 02, வெள்ளிக்கிழமை

திருமலையில் சுற்றுலாத் தகவல் மையத்திற்கான அடிக்கல் நாட்டிவைப்பு

Suganthini Ratnam   / 2012 ஜூன் 28 , மு.ப. 03:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 
(எம்.சுக்ரி)


திருகோணமலையின் திருக்கோணேஸ்வரர் ஆலயத்தை அண்டிய பிரதேசத்தில் சுற்றுலாத் தகவல் மையம் ஒன்று அமைக்கப்படவுள்ள நிலையில் இதற்கான அடிக்கல் நாட்டு வைபவம் நேற்று புதன்கிழமை நடைபெற்றது.  

கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனின் சுமார் 35 இலட்சம் ரூபா நிதியொதுக்கீட்டில் அமைக்கப்படவுள்ள இந்த நிலையத்திற்கான  அடிக்கல்லை அவர் நாட்டிவைத்தார்.

இந்த நிகழ்வில் முதலமைச்சரின் உதவிச் செயலாளர் சித்திரவேல், முதலமைச்சர் செயலகத்தின் திட்டப் பணிப்பாளர் கௌரிதரன், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் கு.நளினகாந்தன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டதாக முதலமைச்சரின் ஊடக இணைப்பாளர் தெரிவித்தார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X