2025 மே 02, வெள்ளிக்கிழமை

மூதூர், திருமலை உள்ளூராட்சி மன்ற சுகாதார தொழிலாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

Kogilavani   / 2012 ஜூலை 02 , மு.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


(முறாசில்)

மூதூர், திருகோணமலை உள்ளூராட்சி மன்றங்களில் பணிபுரியும் சுகாதார தொழிலாளர்கள், வீதி தொழிலாளர்கள் மற்றும் சாரதிகள் ஆகியோர் இணைந்து இன்று திங்கட்கிழமை கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பதவி உயர்வு, படியேற்றம் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து மேற்படி தொழிலாளர்கள் மூதூர் பிரதேச சபைக்கு முன்னாலும் திருகோணமலையில் கிழக்கு மாகாண சபைக்கு முன்னாலும் தமது கோரிகை அடங்கிய சுலோகங்களை ஏந்தியவாறு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நீண்டகாலமாக பணிபுரிந்து வரும் தமக்கு இன்றுவரை பதவி உயர்வு, வருடாந்த படியேற்றங்களை வழங்குவதற்கு பொறுப்புவாய்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லையென்று இவர்கள் தெரிவித்துள்ளனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X