2025 மே 02, வெள்ளிக்கிழமை

திருமலை சாரணர் சங்க பிரதிநிதிகள்- கிழக்கு ஆளுநர் சந்திப்பு

Kogilavani   / 2012 ஜூலை 07 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                    (கஜன்)
திருகோணமலை மாவட்ட சாரணர் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் கிழக்கு மாகாண ஆளுநர் ரியர் அட்மிரல் மொஹான் விஜயவிக்கிரமவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று வெள்ளிக்கிழமை லோவர் வீதியில் உள்ள கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில நடைபெற்றது.

இதுவரை காலமும் திருகோணமலை மாவட்ட சாரணர் சங்கத்;திற்கு ஆளுநர் ஆற்றிய சேவைகளுக்கு நன்றி தெரிவுக்கும் முகமாக சாரணர் சங்கத்தின் பிரதிநிதிகளால்; நினைவுச் சின்னம் ஒன்று ஆளுநருக்கு வழங்கி வைக்கப்பட்டது.

எதிர்காலத்திலும் திருகோணமலை மாவட்ட சாரணர்களுக்கு தன்னாலான உதவிகளை செய்வதற்கு தாயாராக இருப்பதாக இதன்போது கிழக்கு மாகாண ஆளுநர் தெரிவித்தார்.

இதேவேளை, சாரணர்களின்  தேவைகருதி அலுவலகம் ஒன்று அமைக்கப்பட வேண்டும் எனவும் அரச காணிகள் இனங்காணப்படும்  பட்சத்தில் அதில் 20 பேர்ச் காணி சங்கத்தின் அலுவலகம் அமைப்பதற்கு பெற்றுத் தரப்படும் எனவும் ஆளுநரால் சங்கத்;தினருக்கு உறுதி அளிக்கப்பட்டது.

அத்துடன் இவ்வருடம் மாவட்ட சாரணர்களை உள்ளடக்கியதாக சாரணர் ஜம்போறி ஒன்றினை  நடத்துவதற்கு நிதி ஒதுக்கீடு செய்து தருவதாகவும ஆளுநர் இதன்போது குறிப்பட்டார்.

You May Also Like

  Comments - 0

  • sivanathan Saturday, 07 July 2012 11:06 AM

    கலந்து கொண்டவர்களின் பெயர்கள் போடமாட்டீர்களா?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X