2025 மே 03, சனிக்கிழமை

ரொட்டவெவ முஸ்லிம் வித்தியாலய ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

Kogilavani   / 2012 ஜூலை 17 , மு.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கஜன்)

திருகோணமலை, வடக்கு கல்வி வலயத்தைச் சேர்ந்த ரொட்டவெவ முஸ்லிம் வித்தியாலத்தில் ஆசிரியர் பற்றாக்குறை, கட்டிட வசதியின்மை போன்ற குறைபாடுகளை தீர்த்து வைக்குமாறு கோரி நேற்று திங்கட்கிழமை பாடசாலைக்கு முன்னால் பெற்றோர்கள் ஆர்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.

இப்பாடசாலைக்கு 17 ஆசிரியர்கள் தேவைப்படும் இடத்தில் 9 ஆசிரியர்கள் மாத்திரமே கடமையாற்றி வருவதாகவும், தரம் 1 முதல் 11 வரை வகுப்புக்கள் நடாத்தப்பட்டும் இரண்டு வகுப்புக்களைச் சேர்ந்த மாணவர்கள் வெயிலிலும், மழையிலும் திண்டாடுவதை அவதானிக்க முடியாதமையினாலேயே இப்பகிஷ்கரிப்பு நடாத்துவதற்கு தீர்மானித்ததாகவும் பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்விடயம் தொடர்பில் வலயக்கல்வி அதிகாரிக்கும், கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கும் பல தடவைகள் தெரியப்படுத்தியும் பாடசாலை புறக்கணிக்கப்பட்டு வருவதாக பெற்றோர் கவலை தெரிவிக்கின்றனர்.

இப்பகிஷ்கரிப்பு காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரை இடம்பெற்றது.

இதனைத்தொடர்ந்து திருகோணமலை வடக்கு வலயக் கல்வி பணிப்பாளர் விமலசேன மத்துமாராய்ச்சி பாடசாலைக்கு வருகை தந்து பெற்றோர்களுடன் விசேட கூட்டமொன்றினை நடாத்தினார்.

பாடசாலைக்கு ஐந்து இலட்சம் ருபாய் தற்காலிகமாக வழங்குவதாகவும், கிழக்கு மாகாண தேர்தல் முடிவடைந்த பின்னர் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து தருவதாகவும் உறுதியளித்தார்.




You May Also Like

  Comments - 0

  • mansoor ali Tuesday, 17 July 2012 11:23 PM

    நல்ல விசயம்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X