2025 மே 03, சனிக்கிழமை

பொதுச் சுகாதாரப் பரிசோதகரின் கொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2012 ஜூலை 17 , மு.ப. 06:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


(முறாசில்,அமதோரு அமரஜீவா,சி.குருநாதன்)


திருகோணமலை, தம்பலகாமம் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த சுகதாரப் பரிசோதகர் கே.எம்.பளீல் கடமையின்போது  அடித்துக் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து இன்று செவ்வாய்க்கிழமை கவனயீர்ப்புப் போராட்டமொன்று இடம்பெற்றது.

திருகோணமலை பிரதான பஸ் நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்ற இப்போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள்  சுகாதாரப் பரிசோதகரின் கொலையைக் கண்டித்து எழுதப்பட்ட வாசகங்கள் கொண்ட அட்டைகளை  தாங்கியவாறு நின்றனர்.

இப்போராட்டத்தில் திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் திருமதி ஞானகுணாளன், மலேரியா தடையியக்க பிராந்திய வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.ஜமுனா, திருகோணமலை பொது வைத்தியாலைப் பணிப்பாளர் டாக்டர் ஞானகுணாளன், பிராந்திய தொற்றுநோய் தடுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் கயல்விழி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X