2025 மே 03, சனிக்கிழமை

தமிழர்கள் வாழ்ந்த பிரதேசங்களில் அவர்கள் உரிமையுடன் வாழ்வதை தடுத்துவிடாத வகையில் முகா முடிவு இருக்க வ

A.P.Mathan   / 2012 ஜூலை 18 , பி.ப. 03:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரமன்)


“ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் முடிவுகள் சரித்திர ரீதியாக தமிழர்கள் வாழ்ந்த பிரதேசங்களில் அவர்கள் உரிமையுடன் வாழ்வதை தடுத்துவிடாத வகையில் எதிர்காலத்தில் அமைய வேண்டும்” என்றும் “வெளியில் வந்தவர்கள் வெளியில் தொடர்ந்து இருக்க வேண்டும், திரும்பிப்போகக்கூடாது. வெளியில் வரக்கூடிய காரணம் ஏதோ இருந்ததால் தான் வெளியேறவேண்டி ஏற்பட்டது” என்றும் இன்று மாலை திருகோணமலையில் இடம்பெற்ற கட்சி அங்கத்தவர் சந்திப்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தனித்து போட்டியிடுவது குறித்து கருத்து தெரிவித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூறினார்.

அவர் அங்கு தொடர்ந்தும் பேசுகையில்...

“ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மட்டில் நாம் தாராளமாக நடந்து கொள்ளத்தயாராக இருக்கின்றோம். உங்களால் அரசாங்கத்தை நம்ப முடியாது, இப்போது நீங்கள் ஏமாற்றப்பட்டுள்ளீர்கள். இந்த அரசாங்கம் தமிழ் பேசும் இனத்திற்கு எதுவும் செய்யவில்லை. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் முடிவுகள் சரித்திர ரீதியாக தமிழர்கள் வாழ்ந்த பிரதேசங்களில் அவர்கள் உரிமையுடன் வாழ்வதை தடுத்துவிடாத வகையில் எதிர்காலத்தில் அமைய வேண்டும்.

நாம் எந்த முடிவையும் முஸ்லிம் மக்களுக்கு மாறாக எடுக்க மாட்டோம். இந்த நாட்டின் சிறுபான்மை இனங்களின் உரிமைப்போர் பயணத்தை தொடங்கி வைத்தவர்கள் தமிழர்களாகிய நாங்கள். அந்த பயணத்தின் முடிவில் அதன் பலாபலன்களை தமிழ் பேசும் இனமாகிய முஸ்லிம் மக்களும் சேர்ந்து அனுபவிக்க வேண்டும். இவை எல்லாம் நடைபெற முன்னர் கிழக்கு மாகாண சபையை தமிழர்களும் முஸ்லிம்களும் இணைந்து கைப்பற்ற வேண்டும்” என்று கூறினார்.



You May Also Like

  Comments - 0

  • rima Monday, 23 July 2012 01:57 PM

    ச‌ரியான முடிவு

    Reply : 0       0

    akbar Wednesday, 25 July 2012 09:22 PM

    ஐயா சம்பந்தன் படிக்கவேண்டியது நிறைவுண்டு. அதை மு காங்கிர‌சிடம் வாங்க முடியது மஹிந்தராஜபக்ச அரசுடன் பேசித்தான் ஆக வேண்டும் இணைந்து கைபற்றினாலும் எதையும் சாதிக்க முடியது உண்மை ஐயா

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X