2025 மே 03, சனிக்கிழமை

திருகோணமலையில் இந்திய கடற்படைக் கப்பல்

Suganthini Ratnam   / 2012 ஜூலை 19 , மு.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய கடற்படையின் அதிவேக தாக்குதல் கப்பலான 'செற்லற்' திருகோணமலை துறைமுகத்தை நேற்று புதன்கிழமை வந்தடைந்துள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

கப்பலின் கட்டளை அதிகாரி, லெப்டினன்ட் கொமாண்டர் நிட்டின் குப்தா, இலங்கைக்கான இந்திய பாதுகாப்பு ஆலோசகர் சுமீற் கபூர் ஆகியோர் கிழக்கு கரையோரப்பகுதியின் கடற்படை கொமாண்டனர் ரியர் அட்மிரல் ஜயந்த கொலம்பகேயை மரியாதையின் நிமித்தம் சந்தித்துப் பேசினர். இவர்கள் சுமுகமான கலந்துரையாடல்களில் ஈடுபட்டதாகவும்  நினைவுப் பரிசுகளை பரிமாறிக்கொண்டதாகவும் கடற்படை கூறியுள்ளது.

இருப்பினும் இந்திய கடற்படை கப்பல் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டமைக்கான காரணம் தெரியவரவில்லையெனத் தெரிவிக்கப்படுகின்றது.

இக்கப்பல் நாளை வெள்ளிக்கிழமைவரை இலங்கையில் தரித்திருக்கும். இலங்கை கடற்படையினரின் உதவியுடன் திருகோணமலையிலுள்ள வரலாற்று புகழ்மிக்க இடங்களையும் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களையும் இக்கப்பல் பணியாளர்கள் சென்று பார்ப்பதற்கு  திட்டமிட்டுள்ளனர். 

அதிவேக தாக்குதல் கப்பலான 'செற்லற்'  இந்திய கடற்படையினருக்குச் சொந்தமானதாகும். 48.1 மீற்றர் நீளத்தையுடைய இக்கப்பல் 288 தொன் எடை கொண்டு செல்லத்தக்கதாகும்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X