2025 மே 03, சனிக்கிழமை

அகதி முகாமிலுள்ள பெண்ணும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டி

Super User   / 2012 ஜூலை 19 , பி.ப. 12:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சி.குருநாதன்)   

சம்பூர் பிரதேசத்திலிருந்து இடம்பெயர்ந்து கட்டைப்பறிச்சான் நலன்புரி முகாமில் தங்கியிருக்கும் பெண் ஒருவரும் கிழக்கு மாகாண சபை தேர்தலில் போட்டியிடுகிறார்.

பத்மநாதன் பத்மலதா எனும் இப்பெண் அகில இலங்கை தமிழர் கூட்டணியின் திருகோணமலை மாவட்டத்திற்கான வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளார் என அக்கட்சியின் தலைவரும் அக்கட்சியின் திருமலை மாவட்ட முதன்மை வேட்பாளருமான டாக்டர் காசிலிங்கம் விக்னேஸ்வரன் தமிழ்மிரருக்கு தெரிவித்தார்.

சம்பூரிலிருந்து இடம்பெயர்ந்து அகதி முகாம்களில் தங்கியிருக்கும் மக்களின் அவல நிலையை சர்வதேச சமூகத்திற்கு தெரியப்படுத்தும் நோக்கத்துடனேயே தான் அகதி பெண் ஒருவருக்கு வேட்பாளர் பட்டியலில் இடம்கொடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

இக்கட்சியின் வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள 13 வேட்பாளர்களில் பத்மலதா உட்பட ஐந்து பெண்;கள் இடம்பெற்றுள்ளனர் எனவும் டாக்டர் விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X