2025 மே 03, சனிக்கிழமை

மயக்கமருந்து கலந்த உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டு, நகையும் பணமும் கொள்ளையிடப்பட்டதாக முறைப்பாடு

Super User   / 2012 ஜூலை 21 , பி.ப. 01:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                            (எம்.பரீட்)

குச்சவெளி சல்லிமுனைப் பிரதேசத்திலுள்ள குடும்பமொன்றுக்கு அயல்வீட்டிலிருந்த குடும்பத்தினரால் கொடுக்கப்பட்ட ஐஸ் கிறீம், கேக், ஆகியவற்றை உண்ட சிறிது நேரத்தில்  அவ்வீட்டிலிருந்த கணவன் மனைவி ஒன்றரை வயது பிள்ளை ஆகியோர் மயக்கமடைந்ததாகவும் அதன்பின் அவ்வீட்டில் உள்ள அலுமாரியை உடைக்கப்பட்டு நகைகளும் பணமும் கொள்ளையிடப்பட்டுள்ளதாகவும் குச்சவெளிப் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மூதூர் பெரிய பாலம் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என  அறிமுகப்படுத்திக்கொண்ட ஒருவர் சல்லிமுனை பிரதேசத்தில் வாடகை வீடொன்றில் தனதுமனைவி, குழந்தையுடன் தங்கியிருந்துள்ளார். மேற்படி வீட்டின் உரிமையாளர் அயல் வீட்டில் வசிக்கும் நிலையில் வீட்டின் உரிமையாளரின் குடும்பத்திற்கு வாடகைக் குடியிருப்பாளரால் ஐஸ்கிறீம், கேக், குளிர்பானம் ஆகியன நேற்று வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த உணவுப் பொருட்களை உட்கொண்ட வீட்டின் உரிமையாளரின் குடும்பத்தினர் சிறிது நேரத்தில் மயக்கமடைந்த பின்னர், அவ்வீட்டிலிருந்த நகைகளும் பணமும் கொள்ளையிட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேற்படி வீட்டின் உரிமையாளர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வாடகை வீட்டில் வசித்து வந்த குடும்பத்தினர் தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக குச்சவெளி பொலிஸார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X