2025 மே 03, சனிக்கிழமை

மனிதக் கடத்தல் குற்றச்சாட்டில் கைதான த.தே.கூ. வேட்பாளருக்கு விளக்கமறியல்

Menaka Mookandi   / 2012 ஜூலை 26 , மு.ப. 07:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடக்கு, கிழக்கு மக்களை சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைத்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கிழக்கு மாகாணசபையின் திருகோணமலை மாவட்டத்திற்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் உட்பட மூவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை மாவட்ட நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

உப்புவெளி பிரதேசத்தில் வைத்து நேற்று புதன்கிழமை காலை மேற்படி மூவரும் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில்இ இவர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டபோதே திருகோணமலை மாவட்ட நீதவான் யூ.எல்.ஏ.அஸ்ஹார்இ மேற்படி சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார். (அமதோரு அமரஜீவ)

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X