2025 மே 03, சனிக்கிழமை

வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம்

Suganthini Ratnam   / 2012 ஜூலை 29 , மு.ப. 03:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரமன்)


கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழரசுக் கட்சியின் சார்பில் போட்டியிடும் திருகோணமலை மாவட்ட வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் முதலாவது கூட்டம் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.

திருகோணமலை நகரசபைத் தலைவர் க.செல்வராஜா தலைமையில் சிவன்கோவிலடியில் நடைபெற்ற இக்கூட்டத்தில் முதன்மை வேட்பாளர் சிங்காரவேல் தண்டாயுதபாணி உட்பட 13 வேட்பாளர்களும் அறிமுகப்படுத்தப்பட்டனர்.

இக்கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், புளொட் அமைப்பின்  தலைவர் த.சித்தார்த்தன், ரெலோ அமைப்பின்  அரசியல்த்துறைத் தலைவர் எம்.கே.சிவாஜிலிங்கம், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான அ.விநாயகமூர்த்தி, சி.சிறிதரன் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X