2025 மே 03, சனிக்கிழமை

புனித ஆரோக்கிய அன்னை சிற்றாலயம் திறந்துவைப்பு

Suganthini Ratnam   / 2012 ஜூலை 29 , மு.ப. 03:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரமன்)


திருகோணமலை பொதுவைத்தியசாலை வளாகத்தில் வைத்தியசாலை கத்தோலிக்க பணியாளர் சங்கத்தினால் அமைக்கப்பட்ட புனித ஆரோக்கிய அன்னை சிற்றாலயம் நேற்று சனிக்கிழமை மாலை நடைபெற்றது.

திருகோணமலை மட்டக்களப்பு மறைமாவட்ட கத்தோலிக்க ஆயர் அதிவண. கலாநிதி கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை இவ்வாலயத்தை திறந்துவைத்தார்.

வைத்தியசாலைக்கு வருகைதரும் நோயாளர்களின் ஆன்மீகத் தேவை கருதி இவ்வாலயம் தமது சங்கத்தினால் அமைக்கப்பட்டதாக கத்தோலிக்க பணியாளர் சங்கத்தின் தலைவரான விசேட வைத்திய நிபுணர் சேர்மன் பெர்ணான்டோ கூறினார்.

தேவாலய நிர்மாணப்பணிக்கான நிதியுதவியை எகெட் கரிட்டாஸ் நிறுவனம் வழங்கியது.







You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X