2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

கிழக்கு மாகாணத்தில் தேர்தல் வன்முறைகள் மிகக் குறைவு: கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர்

Suganthini Ratnam   / 2012 ஓகஸ்ட் 19 , மு.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரமன்)


சப்பிரகமுவ மற்றும் வடமத்திய மாகாணசபைகளுடன்  ஒப்பிடுகையில் கிழக்கு மாகாணத்தில் தேர்தல் வன்முறைகளும் தேர்தல் சட்ட விதிகளை மீறும் செயல்களும் இந்தமுறை மிக மிகக் குறைந்தளவில் காணப்படுவதாக கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்தார்.

திருகோணமலை நகரசபை மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை  கபே தேர்தல் கண்காணிப்புக்குழுவின் ஏற்பாட்டில் தேர்தல் தொடர்பில் பொதுமக்களுக்கு விளக்கமளிக்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

'திருகோணமலை மாவட்டத்தில் இதுவரையில் எந்தவித தேர்தல் வன்முறைச் சம்பவங்களும் பதிவாகவில்லை. 

திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் 95 வீதமான தேர்தல் பிரசார சுவரொட்டிகள் பொலிஸாரினால் அகற்றப்பட்டுள்ளன.  சில அரசியல் கட்சிகளின் பிரசாரக் காரியாலயங்கள் தாக்கப்பட்ட சம்பவங்கள் தவிர,  மோசமான வேறு எந்தச் சம்பவங்களும் இதுவரையில் இடம்பெறவில்லை.

2008ஆம் ஆண்டுடனும் ஒப்பிடும்போதும் கூட கிழக்கு மாகாணத்தில் இற்றைவரையில் மோசமான பாரிய தேர்தல் முறைகேடுகள் எதுவும் இடம்பெறவில்லை  என்பது எம்மால் அவதானிக்கப்பட்டுள்ளது' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X