2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

திருமலை ஸ்ரீ.ல.மு.கா. வேட்பாளர் ரூபிகா சாந்தனியின் வாகனம் தீக்கிரை

Suganthini Ratnam   / 2012 ஓகஸ்ட் 22 , மு.ப. 04:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


                                                                                                            (ரமன்)


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் திருகோணமலை மாவட்ட வேட்பாளர் லோ.ப.ரூபிகா சாந்தனியின் பிரசார வாகனம் இன்று புதன்கிழமை அதிகாலை வேளையில் இனந்தெரியாதோரினால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

மேற்படி வாகனம் தீக்கிரையாக்கப்பட்டமை தொடர்பில் தான் உப்புவெளி பொலிஸில் முறைப்பாடு செய்ததாக திருகோணமலை மாவட்ட வேட்பாளர் லோ.ப.ரூபிகா சாந்தனி தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

'நான் பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்தவரானபோதிலும், இந்தமுறை சிறுபான்மைக்கட்சி ஒன்றின் சார்பில் தேர்தலில் போட்டியிடவுள்ளேன். இதனை சகித்துக்கொள்ளமுடியாத எனது அரசியல் எதிரிகளே வாகனத்தை தீக்கிரையாக்கியுள்ளனர்.

நேற்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவுவரை தேர்தல் பிரசார நடவடிக்கையில் நான்  ஈடுபட்டுவிட்டு திருகோணமலை, துளசிபுரம் பகுதியில் உள்ள  எனது வீட்டிற்கு திரும்பினேன்.  வழமைபோன்று வாகனத்தை வீட்டின் முன்பகுதியில் நிறுத்திவிட்டுச் உறங்கச் சென்றுவிட்டேன். இதன் பின்னரே இந்த வாகனம் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது' என்றார். 

வாகனம் தீக்கிரையாக்கப்பட்டமை தொடர்பில் உப்புவெளி பொலிஸார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.





You May Also Like

  Comments - 0

  • rizad Wednesday, 22 August 2012 05:36 AM

    அக்கரைப்ப‌ற்று இஃப்தார் செலவில் ஒரு வாகனத்தை வாங்கிக் குடுக்கலாம் தானே.

    Reply : 0       0

    Mohamed Wednesday, 22 August 2012 07:20 AM

    றிசாட், அக்கரைப்பற்றில் செலவளித்தது அங்குள்ள கட்சிஆதரவாளர்கள்தான். அதைதான் அவர்களுக்கு பொறுக்க முடியவில்லை. அதையும் விட, இஃப்தார் என்பது எந்த முஸ்லீமும் முன்வந்து அல்லாஹ்வின் நன்மையை எதிர்பார்த்து அள்ளிவழங்கும், அண்ணமளிக்கும் விடயம். அதை விளங்காதவர்கள் அங்கு பலர், நீர் எங்கொ?

    Reply : 0       0

    S.Sinasudeen Friday, 24 August 2012 05:08 AM

    அக்கரைப்பற்றில் செலவளித்தது அங்குள்ள கட்சி ஆதரவாளர்கள்தான். அதைத்தான் அவர்களுக்கு பொறுக்க முடியவில்லை. அதையும் விட, இஃப்தார் என்பது எந்த முஸ்லிமும் முன்வந்து அல்லாஹ்வின் நன்மையை எதிர்பார்த்து அள்ளிவழங்கும், அன்னமளிக்கும் விடயம். அதை விளங்காதவர்கள் அங்கு பலர்...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X