2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

'இனம் மதம் மொழி வேறுபாடுகளுக்கு அப்பாலான இலங்கையை உருவாக்குவதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது'

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 22 , மு.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


(முறாசில்)

'இனம் மதம் மொழி முதலான வேறுபாடுகளுக்கு அப்பால் புதிய இலங்கையை உருவாக்குவதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது. இம்முயற்சியில் பங்கெடுக்கும் வகையில் அனைத்து இன மக்களையும் அது அரவனைத்துச் செல்கின்றது' என சுற்றாடல் வளத்துறை அமைச்சர் அனுரபிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.

மூதூர் நொக்ஸ் சந்தியில்  இடம்பெற்ற  தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

'அரசாங்கம் ஒரு மதத்திற்கு அல்லது இனத்திற்கென்று சேவை புரியவில்லை. நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்கும் பொதுவாகவே சேவையாற்றுகிறது. மக்கள் அனைவரும் சிறப்பாக வாழவேண்டும் என்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும். இதனாலேயே அனைத்து பகுதிகளிலும் நாம் ஒரே பேச்சைப் பேசுகின்றோம்.

இப்பகுதியில் பயங்கரவாதிகளோடு நேருக்கு நேரே நின்று யுத்தம் செய்து இங்கு நிலவிய பிரச்சினைகளை தீர்;த்து வைத்தோம்.  மூன்று பிரமாண்டமான பாலங்களை அமைத்து இப்பகுதி மக்களுக்கு சிறந்த போக்குவரத்தையும் ஏற்படுத்தியுள்ளோம்.
எதிர்வரும் காலத்திலும் கூடிய சேவையை செய்வதற்கு காத்துக்கொண்டிருக்கின்றோம். எனவே, கடந்த காலங்களில் அரசாங்கத்துடன்; ஒத்துழைத்தது போல் இனிவரும் காலங்களிலும் இப்பகுதிமக்கள் ஓத்துழைக்கவேண்டும்' என்றார்.

இக்கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் வேட்பாளர்களான நஜீப் ஏ.மஜீத், ஆதம் பாவா தௌபீக் ஆகியோரும் உரையாற்றினர்.



You May Also Like

  Comments - 0

  • kanavaan Wednesday, 22 August 2012 08:34 PM

    அமைச்சரே அப்படி இன, மத வேறுபாடுகளுக்கப்பாலான இலங்கையை அரசாங்கம் உருவாக்க முயற்சிக்கிறதென்றால், மத ஸ்தானங்கள் தாக்கப்படுவதையும் பிரார்தனையில் உள்ள‌ மக்கள் தாக்கப்படுவதையும் ஏன் ஐயா உங்களது அரசாங்கம் பார்த்துக் கொண்டிருந்தது?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X