2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு முஸ்லிம் மக்களுக்கும் ஏற்புடையதாக இருக்க வேண்டும்: இரா.சம்பந்தன்

Menaka Mookandi   / 2012 ஓகஸ்ட் 26 , மு.ப. 09:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


(சி.குருநாதன்)

'ஆறு தசாப்தங்களுக்கு மேலாக நீடித்து வரும் இனப்பிரச்சினைக்கு சர்வதேச பங்களிப்புடன் காணப்படும் அரசியல் தீர்வு முஸ்லிம் மக்களுக்கும் ஏற்புடையதாக இருக்க வேண்டும் என்பதில் தமது கட்சி உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றது' என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவரும் திருகோணமலை மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

திருகோணமலை, பெரியகுளம் என்னுமிடத்தில் நேற்று சனிக்கிழமை மாலை நடைபெற்ற கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

'ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையுடன் நாம் பேசிக்கொண்டிருக்கின்றோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் இடையே நெருங்கிய உறவு இருக்க வேண்டும்.

கிழக்கு மாகாணசபைத் தேர்தலின் பின்னர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து ஆட்சி அமைக்க நாம் தயாராக இருக்கின்றோம். தாராளமாக விட்டுக்கொடுத்து செயல்படுவதற்கு நாம் தயாராகவும் உள்ளோம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் இடையே நெருங்கிய உறவு இருக்க வேண்டும். நீதிக்காக போராடும் நாம் எவருக்கும் அநீதி இழைக்க மாட்டோம்' என்றும் சமபந்தன் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X